புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் சத சண்டி ஹோமம் நிறைவு
ADDED :109 days ago
புதுச்சேரி; புதுச்சேரி, தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், நடந்து வரும் சத சண்டி ஹோமத்தின் 11வது நாள் மற்றும் நிறைவு விழா நேற்று நடந்தது. புதுச்சேரி, தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் நவராத்திரியை முன்னிட்டு, இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் சத சண்டி ஹோமம் நடந்து வருகிறது. நேற்று 11வது நாள் மற்றும் நிறைவு விழா நடந்தது. அதில், அம்மன் மகிஷா சுரமர்த்தினி அலங்காரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மகிஷாசூர வதம் நடந்தது. விழாவில் முதல்வர் ரங்கசாமி, முன்னாள் எம்.பி., ராமதாஸ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர். முன்னதாக வழக்கம் போல் நடக்கும் கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.