உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயிரம் பொன்னாச்சே!

ஆயிரம் பொன்னாச்சே!

கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ளது ஆடுதுறை என்னும் திருவாவடுதுறை. நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் தன் தந்தையின் யாகத்திற்கு பொருள் வேண்டி இங்குள்ள மாசிலாமணீஸ்வரரை வேண்டி பதிகம் பாடினார். சிவபெருமானும் இங்குள்ள பலிபீடத்தில் ஆயிரம் பொற்காசுகள் தினமும் கிடைக்கும் என அருள்புரிந்தார். அப்பாடல்களை தினமும் மாலையில் விளக்கேற்றி பாடினால் வறுமை நீங்கும். செல்வம் பெருகும். சேமிப்பு கூடும். 

இடரினும் தளரினும் எனதுறு நோய் 

தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்

கடல்தனில் அழுதொடு கலந்த நஞ்சை

மிடறினில் அடக்கிய வேதியனே! 

இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல் 

அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !