பல்லடம்: செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :20 minutes ago
பல்லடம்: பல்லடம் அருகே செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது.
பல்லடம் அடுத்த, நாரணாபுரம் கிராமத்தில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, 23ம் தேதி அன்று வாஸ்து பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, கணபதி ஹோமம், மகாலட்சுமி, நவகிரக ஹோமம் உள்ளிட்டவை நடந்தன. நேற்று முன்தினம், கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலரும் பங்கேற்றனர். மஹா அபிேஷகத்துக்கு பின், சிறப்பு அலங்காரத்தில் செல்வவிநாயகர் அருள்பாளித்தார்.
விழாக் குழுவின் சார்பில், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.