காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சேனை முதலி ( படை தளபதி) வைபவம்
ADDED :346 days ago
காரமடை; சேனை முதலி ( படை தளபதி) வைபவம் வைணவ திருத்தலங்களில் சிறப்பாக நடைபெறுகிறது. கொங்கு மண்டலத்தில் வைணவ சிறப்புவாய்ந்த காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் இந்த வைபவம் நடந்தது. அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை, சேனை முதலி உற்சவமூர்த்க்கு திருமஞ்சனம், மலர் அலங்காரம் முடிந்தது மந்திர புஷ்பம், அஷ்டோத்திரம் மங்கள ஆரத்தி நடந்தது. தொடர்ந்து தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் ஸ்தலத்தார்கள் அர்ச்சகர்கள் திருக்கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.