சிதம்பரம் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோவில் யாகசாலை பூஜை
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப்பெருமாள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை துவங்கியது.
சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் சித்திரக்கூடம் என்றழைக்கப்படும் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோவிலின் விமானராஜ கோபுரங்கள், மகாமண்டபம் ஆகியவை 30 ஆண்டுகளுக்கு பிறகு புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் வரும் நவ3-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபம் முன்பு உள்ள நடனப்பந்தலில், நேற்று யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலையில் புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டு விஷ்வக்சேன ஆராதனம், வாஸ்துசாந்தி, ரக்க்ஷாபந்தனம் ஆகியன நடந்தது. கோவில் திருப்பணிக்கான ஏற்பாடுகளை புவனகிரி மாறன், கோவிந்தசாமி மற்றும் குடும்பத்தினர் சம்ப்ரோஷணத்திற்க்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் சுதர்ச னன், சவுந்தரராஜன் திருவேங்கடவன் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.