கொங்கு ஏழு தலங்களில் பூஜிக்கப்பட்ட மங்கள வேலுக்கு வழிபாடு; திரண்ட பக்தர்கள்
ADDED :57 days ago
திருப்பூர்: கொங்கு ஏழு திருத்தலங்களில் கொண்டு சென்று பூஜிக்கப்பட்ட மங்கள வேல் திருப்பூர், செவந்தாம்பாளையம் மாகாளியம்மன் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு திருப்பூர் மாநகர ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் மங்கள வேல் வைத்து சிறப்பு அபிேஷகம் நடத்தி வழிபாடு நடத்தப்பட்டது. திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர். விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ‘மங்கள வேல் டிச., 25ல், திருப்பூர் கொங்கணகிரி கோவிலிலிருந்து யாத்திரை புறப்பட்டு அலகுமலை வித்யாலயா பள்ளி வளத்தில் வேல் வழிபாடு நடத்தப்படும். தொடர்ந்து அலகுமலை முருகன் கோவிலில் சிறப்பு தரிசனம் நடத்தி நிறைவு பெறவுள்ளது. தொடர்ந்து அலகுமலை மலையடிவாரத்தில் அன்ன தானம் வழங்கப்படும்’ என்றனர்.