உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் 5ம் தேதி அன்னாபிஷேகம்

கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் 5ம் தேதி அன்னாபிஷேகம்

அரியலுார்: அரியலுார் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் பிரகதீஸ்வரர் கோவிலில் வரும் 5ம் (தேதி புதன் கிழமை) அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.


இதையொட்டி 3ம் தேதி கணக்க விநாயகருக்கு கங்கைநீர், மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், தேன், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், பழங்கள் உள்ளிட்ட 21 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மலர் மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படவுள்ளது.4ம் தேதி குபேர லட்சுமிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. 5ம் தேதி அன்னாபிஷேகம் நடக்கிறது. இதற்காக, 1000 கிலோ அரிசியால் சாதம் சமைக்கப்பட்டு பிரகதீஸ்வருக்கு சாத்தப்பட்டு, மஹா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து பிரகதீஸ்வரருக்கு ருத்ரஹோமம், மகாஅபிஷேகம், தீபாராதனை நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அன்னாபிஷேக விழா கமிட்டியினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !