பழநியில் இருந்து அறுபடைவீடு ஆன்மீக சுற்றுலா பக்தர்கள் சுவாமி தரிசனம்
பழநி; பழநியில் இருந்து தமிழக அரசு அறிவித்துள்ள அறுபடை வீடு ஆன்மீகப் பயணத்தில் பழநி முருகன் கோயிலில் தரிசனம் செய்தனர்
பழநி கோயிலில் நேற்று (அக்.31) தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலை துறை சார்பில் அறுபடைவீடு ஆன்மீக சுற்றுப்பயண பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்தனர். அக்.,29 ல் நாகப்பட்டினம் தஞ்சாவூர், இரண்டு மண்டலங்களை சேர்ந்த பக்தர்கள் 200 பேர் அறுபடை வீடு சுவாமி தரிசன பயணத்தை துவங்கினர். சுவாமி மலையில் தரிசனம் செய்த பின் (அக்.,30) திருத்தணியில் சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின் பழநிக்கு கிளம்பினர். நேற்று முன்தினம் இரவு பழநிக்கு வந்த அவர்களுக்கு பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளில் அறை வசதி, உணவு வசதிகள் செய்து தரப்பட்டன. நேற்று (அக்.31) காலை சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம், அழகர் கோயிலில் தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் கோயிலுக்கு புறப்பட்டனர். இன்று (நவ.1.,) திருச்செந்தூரில் தரிசனம் முடித்த பின்பு சுவாமி மலைக்கு செல்வர். அதன் பின் பக்தர்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர் மண்டலங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரும்பிச் செல்ல உள்ளனர். ஹிந்து அறநிலைத்துறை சார்பில் தங்க இடம் உணவு ஆகியவை வழங்கப்படுகிறது. இவர்களுடன் மருத்துவ குழுவினர் இணைந்து செல்கின்றனர்.