உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 5 நாள் பவித்ர உத்சவம் துவக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 5 நாள் பவித்ர உத்சவம் துவக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பவித்ர உத்சவம் இன்று முதல் 5 நாட்களுக்கு நடக்கிறது.


பட்டர்கள் கூறியதாவது: பவித்ர உத்சவம் என்றால் உத்சவங்களிலேயே புனிதமானது என்பது பொருள். இந்த உத்சவம் சிவாலயங்களில் ஐப்பசி மாதத்தில் நடக்கும். மூலஸ்தான சுவாமிகளுக்கும், உத்சவர்களுக்கும் திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள், நைவேத்தியங்கள், அலங்காரங்கள், வேத பாராயணம், மேள வாத்தியங்களுடன் நீண்ட நேரம் வழிபாடு நடக்கும். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். அக்காலத்தில் வெளியூரில் வசிப்பவர்கள் பவித்ர உத்சவத்தை முன்னிட்டு குடும்பத்துடன் வந்து வழிபட்டு கோவிலில் தங்கி நண்பர்கள், உறவினர்களை சந்திக்கும் குடும்ப விழாவாக இருந்தது. இது பக்தியும் கலாசாரமும் பின்னிப் பிணைந்த திருவிழாவாக இருந்தது. நாளடைவில் வேலை, தொழில் நெருக்கடியால் பங்கேற்போரின் எண்ணிக்கையும் நேரமும் படிப்படியாகக் குறைந்துவிட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !