உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் தொடர் மழையிலும் தீ மிதித்த பக்தர்கள்

நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் தொடர் மழையிலும் தீ மிதித்த பக்தர்கள்

ராசிபுரம்; ராசிபுரத்தில் நேற்று மழை பெய்தபோதும், நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீ  மிதித்தனர்.  ராசிபுரம் – நாமக்கல் சாலையில், நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசியில் தேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 28ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 4ம் தேதி அதிகாலை பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து சாட்டையடி நிகழ்ச்சி நடந்தது. இதில், பூசாரி முன் வரிசையாக பக்தர்கள் நின்று சாட்டையடி வாங்கி சென்றனர். தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான தீமிதி விழா நேற்று நடந்தது. பக்தர்கள் வேண்டுதலுக்காக மரக்கட்டை விறகுகளை கொண்டு வந்து கொடுத்தனர்.  நள்ளிரவு தீ பற்றவைக்கப்பட்டு எரியத்தொடங்கியது. நேற்று அதிகாலை, 2:00 மணியளவில் கோவில் பூசாரி தீக்குண்டத்தில் இறங்கிய பின்பு பக்தர்கள்.  பெண்கள் இறங்கினர். அலகு குத்தி, தீச்சட்டி எடுத்து வந்து பக்தர்கள் தீ மிதித்தனர். 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர். அதிகாலை முதல் துாறல் மழை தொடங்கியது. இருந்தாலும் பக்தர்கள் சளைக்காமல் மழையில் நனைந்து கொண்டே தீ மிதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !