உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் சாய்பாபா 100 வது பிறந்தநாள் விழா

காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் சாய்பாபா 100 வது பிறந்தநாள் விழா

காரைக்குடி; காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள சத்ய ஸாயி சேவா சமிதியில், சத்ய பாபாவின் 100 வது பிறந்த நாள் விழா நேற்று தொடங்கியது. நேற்று மாலை, தில்லை ஆச்சியின் வீணை கச்சேரி நடந்தது. தொடர்ந்து மகிளா பஜன் மற்றும் மங்கள ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. இன்று மாலை 6.15 மணிக்கு சிறப்பு சாய் பஜன் மங்கள ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை சிறப்பு மருத்துவ முகாமும், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவ. 22 மாலை 5.30 மணிக்கு கலியுக அவதாரம் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா என்ற தலைப்பில் சரஸ்வதி ராமநாதன் உரை நிகழ்த்துகிறார். 6.30 மணிக்கு லட்சார்ச்சனை, இரவு 8 மணிக்கு மங்கள ஆரத்தி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நவ. 23 அன்று கணபதி ஹோமம், நகர சங்கீர்த்தனம், பிரசாந்தி கொடியேற்றம், பிறந்தநாள் கேக் வெட்டுதல் நிகழ்ச்சி, சிறப்பு சாய் பஜன், ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் தமிழ்நாடு தெற்கு சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !