ஒரே நாளில் விழா
ADDED :1 hours ago
தந்தை, மகன்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்க்க திருக்கார்த்திகை விழா கொண்டாடப்படுகிறது. முருகனை வளர்த்த ஆறு பெண்களை சிவபெருமான் நட்சத்திரமாக மாற்றினார். அவர்களுக்கு ‘கார்த்திகைப்பெண்கள்’ எனப் பெயர் சூட்டினார். எனவே முருகனுக்குரிய விரதங்களில் கார்த்திகை பிரதான இடம் பிடித்தது. இந்நாளில் சிவன், முருகனின் கோயில்களில் தீபமும், சொக்கப்பனையும் ஏற்றப்படும். தந்தைக்கும், மகனுக்கும் ஒரே நாளில் விழா வருகிறது.