மொக்கணீஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்
ADDED :1 hours ago
அவிநாசி; கூழேகவுண்டன் புதூரில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனமர் மொக்கணீஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது.
அவிநாசி அடுத்த சேவூர் அருகே கூழே கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனமர் மொக்கணீஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம் நேற்று விநாயகர் வழிபாட்டுடன் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வலம்புரி சங்கு ஸ்தாபனம், ஸ்ரீ ருத்ர வேத பாராயணம், திருமுறை போற்றி வழிபாடு, மூல மந்திர ஹோமம், மகா அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சங்காபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.