உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படப்பை கல்யாண சீனிவாச பெருமாள் கோவில் வனபோஜனம் உத்சவம்

படப்பை கல்யாண சீனிவாச பெருமாள் கோவில் வனபோஜனம் உத்சவம்

படப்பை: படப்பை அருகே மாகாண்யம் கிராமத்தில் கல்யாண சீனிவாசப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நேற்று வனபோஜனம் விழா நடந்தது. இதில், கோவிலில் இருந்து அருகே உள்ள வன பகுதிக்கு கிருஷ்ணர் எழுந்தருளினார். ஊர் மக்கள், சிறுவர்கள் கிருஷ்ணருடன் புறப்பட்டு மகாண்யம் வன பகுதியில் வழிபாடு செய்து உணவு அருந்தினர். மேலும், பானையடித்தல், கண்ணாமூசசி உள்ளிட்ட விளையாட்டுகளை சிறுவர்கள் வன பகுதியில் விளையாடி மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !