கடலுார் பாரஸ்வநாதர் கோவிலில் சிறப்பு பூஜை; கல்யாண மகோற்சவம்
ADDED :1 days ago
கடலுார்: கடலுார் பாரஸ்வநாதர் கோவிலில் ஜென்ம கல்யாண மகோற்சவம் நடந்தது. கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் பாரஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாரஸ்வநாதர் ஜென்ம கல்யாண மகோற்சவத்தையொட்டி நேற்று காலை சுவாமி ரதத்தில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தார். தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. ஜெயின் சங்க தலைவர் அசோக் மேத்தா, உத்தம் டட்டா குஷல்ராஜ் தாரிவால், தினேஷ்ஜி சிங்வி, ஆனந்த் மேத்தா, உபயதாரர் பதன்பாய்சா திலோக்சந்த்சா, பாரஸ்மல் ஜெயின் மற்றும் ஜெயின் சமூகத்தினர் பங்கேற்றனர்.