உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்கிரவாண்டி பெருமாள் கோவிலில் ஆண்டாள் உற்சவர் சிலை பிரதிஷ்டை

விக்கிரவாண்டி பெருமாள் கோவிலில் ஆண்டாள் உற்சவர் சிலை பிரதிஷ்டை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பெருமாள் கோவிலில் ஆண்டாள் உற்சவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.


ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு பக்தர்களால் வெள்ளியில் உற்சவர் சிலை செய்யப்பட்டது. அதன் பிரதிஷ்டியை முன்னிட்டு நேற்று அதிகாலை 5:00 மணியளவில் புண்ணியாக வாசனம், அக்னி பிரதிஷ்டை ஹோமம், சிலை கண் திறத்தல், விஸ்வரூபம், மகாசந்தி ஹோமம், திருமஞ்சனம், மகா பூர்ணாஹூதி, யாகசாலை பூஜை நடந்து ஆண்டாள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. யாகசாலை பூஜை மற்றும் திருமஞ்சனங்களை ஆலகிராமம் பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில் திருவந்திபுரம் வெங்கடேஷ் பிரசன்னா பட்டாச்சாரியார் செய்திருந்தனர். விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !