உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூரில் பகல் பத்து துவக்கம்

திருக்கோஷ்டியூரில் பகல் பத்து துவக்கம்

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெறும் அத்யயன உத்ஸவத்தில் நேற்று பகல்பத்து துவங்கியது. டிச.30ல் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.


சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலில் தமிழ்மறைத் திருநாளாக திவ்யபிரபந்தம் பாடப்பட்டு அத்யயன உத்ஸவத்தில் பகல் பத்து, மற்றும் ராப்பத்து கொண்டாடப்படுகிறது.


நேற்று பெருமாள் பெரிய சன்னதியிலிருந்து ஆண்டாள் சன்னதி எழுந்தருளினார்.


தொடர்ந்து சுவாமிக்கு காப்பு கட்டி திருவாராதனை கண்டருளினார். டிச.29 மாலையில் நாச்சியார் திருக்கோலத்தில் பெருமாள் மோகினி அவதாரம் எடுத்து அருள்பாலிப்பார். டிச.30ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலையில் பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி சயனத்திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த அலங்காரம் நடைபெறும்.


மாலையில் ராஜாங்க கோலத்திலும், இரவில் ராஜ அலங்காரத்திலும் பெருமாள் எழுந்தருளி ஆழ்வார் பாசுரங்கள் பாடப்பட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருளுவார். தொடர்ந்து ராப்பத்து உற்ஸவம் துவங்கும்.


மாலையில் தினசரி சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந் தருளல் நடைபெறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !