கிறிஸ்துவ சிந்தனைகள்: ஆறுதலாக இருங்கள்
ADDED :2 days ago
சொத்தை இரண்டு மகனுக்கும் சமமாக பிரித்துக் கொடுத்தார் தந்தை. நீங்களே எனக்கு பெரிய சொத்து என சொன்னவன் மூத்தவன். ஆனால் இளையவனோ அதை பெற்றுக்கொண்டு தனிக்குடித்தனம் போனான். வேலைக்கும் செல்லவில்லை.
நண்பர்களுடன் ஊதாரியாக செலவு செய்து, சொத்தை இழந்தான். கடைசியில் மனம் திருந்திய இளையவன் பன்றி மேய்க்கச் சென்றான். வேறு வழியின்றி தந்தையிடம் உதவி கேட்டு நின்றான்.
அவனைக் கண்ட தந்தை உடனே கட்டித் தழுவினார். இதைப் பார்த்த மூத்தவனுக்கோ கோபம். ‘உன் தம்பி இப்போதாவது வந்தானே... அவன் நம்மோடு இருப்பது தானே நல்லது’ என்றார் தந்தை.
தவறு செய்தவரை காயப்படுத்தாதீர்; ஆறுதலாக இருங்கள்.