ஆலங்குடியிலிருந்து சபரிமலைக்கு பாதயாத்திரை
புதுக்கோட்டை: ஆலங்குடி பகுதியிலிருந்து, சபரிமலையில் தரிசனத்திற்காக, ஐயப்ப பக்தர் ஒருவர் மற்றும் ஒரத்தநாடு பகுதியில் இருந்து 14 புதுக்கோட்டையில் இணைந்து, 400கி.மீ., துாரம், 13 நாள் பாதயாத்திரை பயணமாக புறப்பட்டு சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருந்து, ஆலங்குடியை சேர்ந்த ரமேஷ், 53, என்ற ஐயப்ப பக்தர் 7வது வருடமாக சபரிமலைக்கு நேற்று பாதயாத்திரை பயணம் மேற்கொண்டார். இவருடன் தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 14 பேர் கொண்ட குழுவினர் 16 வருடமாக சபரிமலைக்கு பாதயாத்திரை பயணம் மேற்கொண்டனர். இவர்கள் அனைவரும் புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் ஒன்றாக இணைந்து, இந்த பாதயாத்திரை பயணமானது, புதுக்கோட்டை, மதுரை, தேனி, வழியாக குமுளி வண்டிபெரியார், புல்மேடு வழியாக 400 கி.மீ., துாரத்தை 13 நாட்கள் நடைபயணமாக சென்று, சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய உள்ளனர். மேலும், சபரிமலையில் தரிசனத்திற்காக, பாதயாத்திரையாக புறப்பட்ட ஐயப்ப பக்தர்களை பொதுமக்கள், பக்தர்கள் புதுக்கோட்டையில் வழி அனுப்பி வைத்தனர்.