உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவ ஜோதிர்லிங்க சிறப்பு யாத்திரை ரயில் அறிவிப்பு

நவ ஜோதிர்லிங்க சிறப்பு யாத்திரை ரயில் அறிவிப்பு

சென்னை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, தமிழகத்தில் இருந்து நவ ஜோதிர்லிங்க சிறப்பு யாத்திரை ரயில் இயக்கப்பட உள்ளது.


நாட்டில் பல்வேறு ஆன்மிக சுற்றுலா இடங்களை மக்கள் காண, தனியார் பங்களிப்போடு, ‘பாரத் கவுரவ்’ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், வரும் பிப்., 15ம் தேதி கொண்டாடப்படும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு, தமிழகத்தில் இருந்து நவ ஜோதிர்லிங்க சிறப்பு யாத்திரை ரயிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து, பிப்., 6ம் தேதி புறப்படும் சிறப்பு ரயில், திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்பட உள்ளது. இந்த புனித யாத்திரையில், வட மாநிலங்களில் உள்ள மல்லிகார்ஜுனர், பார்லி வைத்தியநாத், அவுண்டா நாகநாதர், பீமாசங்கர், த்ரியம்பகேஸ்வர், சோம்நாத், கிருஷ்னேஸ்வர், ஓம்காரேஸ்வர் மற்றும் மஹாகாளேஸ்வர் என, ஒன்பது ஜோதிர் லிங்கங்களை தரிசிக்கலாம். மொத்தம் 13 நாட்கள் கொண்ட, இந்த ஆன்மிக சுற்றுலாவுக்கு, ‘ஸ்லீப்பர்’ வகுப்பில் ஒருவருக்கு 29,750 ரூபாய், 3ம் ‘ஏசி’ வகுப்பில் 44,950 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மேலும் தகவல் பெற 73058 58585 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம். www.tourtimes.in இணைய தளத்தையும் காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !