உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசியில் சிவாலய சைவாகம பூஜாக்ரம பயிற்சி முகாம் துவங்கியது

அவிநாசியில் சிவாலய சைவாகம பூஜாக்ரம பயிற்சி முகாம் துவங்கியது

அவிநாசி: அவிநாசியில் உள்ள, திருப்புக்கொளியூர் ஸ்ரீ வாகீசர் மடாலயத்தில், ஸ்ரீ ஸ்ரீ வேத ஆகம ஆய்வு நிறுவனம் சிவ ஸ்ரீ சம்பந்த சிவாச்சார்யார் சிவாகம சம் சோதன சபை மற்றும் அவிநாசி ஸ்ரீ வாகீசர் மடாலயம் இணைந்து சைவாகமோக்த நித்ய பூஜா க்ரியாக்ரம போதனா சிபிரம் சிவாலாய சைவாகம பூஜாக் ரம பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. மஹா கணபதி ேஹாமம் நடந்தது.


வரும் 27ம் தேதி வரை நடைபெறும் பயிற்சி முகாமில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். முன்னதாக வாகீசர் மடாலய ஆதினம் காமாட்சிதாச சுவாமிகளின் 102வது பிறந்தநாள் நிறைவு பெற்றதை முன்னிட்டு மாணவர்கள் ஆசி பெற்றனர். நேற்று நடந்த பயிற்சி முகாமில் சிவாச்சார்யார்கள் நித்ய கர்மானுஷ்டானம், சைவாசாரம் ஆகிய பயிற்சிகளை சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கோவில் சண்முக சிவாச்சார்யார் நடத்தினார். பெங்களூரூ வேத ஆகம சமஸ்க்ருத மஹா பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவாச்சார்யார் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார். ஏற்பாடுகளை ஸ்ரீ ஸ்ரீ குருகுலம் ஆகம வித்யார்த்திகள் சேவா சமிதியின், ஈரோடு அருண்குமார் சிவம், சிவன்மலை சிவசுந்தர சிவம், பண்ருட்டி அரவிந்த் சிவம், பெங்களூரூ ஜெண்பகராம சிவம், குறும்பலுார் கார்த்திகேய சிவம், பெங்களூரூ கார்த்திகேயசிவம், கொடுமுடி பிரகாஷ் சிவம், சென்னை அருள் நந்திசிவம், அவிநாசி சர்வேஷ் சிவம் ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !