உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாத யாத்திரை விழா; காசி விநாயகர் கோவிலில் இருந்து பால் குட ஊர்வலம்

பாத யாத்திரை விழா; காசி விநாயகர் கோவிலில் இருந்து பால் குட ஊர்வலம்

அவிநாசி: அவிநாசி திருமுருக பக்தர்கள் பேரவையின் 48ம் ஆண்டு பாதயாத்திரை விழாவை முன்னிட்டு காசி விநாயகர் கோவிலில் இருந்து, 100க்கும் மேற் பட்டோர் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். ஸ்ரீ பால தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. மயில் வாகனத்தில் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி நான்கு ரத வீதிகளிலும் மேளதாளத்துடன் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் . ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கிருத்திகை கமிட்டி, பழனி பாதயாத்திரை அன்னதான கமிட்டி, திருமுருக பக்தர்கள் பேரவை பாதயாத்திரை குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !