ஸ்ரீஅய்யப்பன் மண்டல பூஜை அன்னதானத்தில் குவிந்த பக்தர்கள்
ADDED :1 days ago
திருப்பூர்: திருப்பூர் காலேஜ் ரோடு அய்யப்பன் கோவிலில், மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. அதன்படி, கார்த்திகை மற்றும் மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமை தோறும், அன்னதானம் வழங்கப்படுகிறது. ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று, அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகிகள் முன்னிலையில், காலை, 9:00 மணிக்கு மகேஸ்வர பூஜை நடந்தது; தொடர்ந்து, 11:00 மணி முதல், மாலை, 3:00 வரை, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, அன்னதானத்தில் பங்கேற்றனர்.