உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிதுனம் : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026

மிதுனம் : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026

மிருகசீரிடம்: முயற்சி வெற்றியாகும்


தைரிய, வீரியகாரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும்,  1,2 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.


2026ம் ஆண்டில் மிருகசீரிடம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் நெருக்கடி விலகும், வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். உறவினரால் ஆதாயம் உண்டாகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வழக்கு விவகாரம் சாதகமாகும். 


சனி சஞ்சாரம்

மிருகசீரிடம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து வேலையில் நெருக்கடி, தொழிலில் போராட்டம், வேலையில் பிரச்னை ஏற்படுத்தினாலும் அதன்பின், லாப சனியாக சஞ்சரிப்பவர் உயர்வை ஏற்படுத்துவார். வியாபாரம், தொழிலில் லாபம் காண வைப்பார்.  நெருக்கடியில் இருந்து விடுவிப்பார். பணியாளர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு, எதிர்பார்த்த இட மாற்றத்தை கொடுப்பார். விஐபிகள் ஆதரவால் செல்வாக்கை உயர்த்துவார். பணத்துடன் புகழுக்கும் வழிகாட்டுவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை முன்னேற்றத்தை வழங்கி வரும் சனி அதன்பின் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வேலை, தொழிலில் சோதனை உண்டாக்குவார்.பணியாளர்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவதும், வியாபாரிகள் கவனமாக இருப்பதும் சட்டத்திற்கு புறம்பான நிலையை தவிர்ப்பதும் அவசியம். 


ராகு, கேது சஞ்சாரம் 

1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை வியாபாரம், தொழிலில் திட்டமிட்டு செயல்படுவதும் அக்கறை கொள்வதும் அவசியம். நவ.13 முதல் மூன்றாமிட கேதுவும் பாக்ய ராகுவும் தன்னம்பிக்கையை அதிகரிப்பர். வாழ்க்கையை வளமாக்குவர்.  விருப்பத்தை நிறைவேற்றுவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை எடுத்த வேலைகள் வெற்றியாகும். அந்தஸ்து உயரும். அதன் பின், 2ம் இட கேது, 8ம் இட ராகு, குடும்பத்தில் குழப்பம், பண விவகாரத்தில் நெருக்கடி, உடல் பாதிப்பு என எதிர்மறை பலன் கிடைக்கும். 


குரு சஞ்சாரம்

மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு மார்ச்17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சென்று சஞ்சரிப்பதால், 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 17 முதல் தன, குடும்ப வாக்கு ஸ்தான குருவாக குடும்பத்தில் நிம்மதி, பண வரவில் தடையற்ற நிலை, கொடுத்த வாக்கை காப்பாற்றுவது, பொன், பொருள் சேர்க்கையை தருவார். மே 26 முதல் திருமண வயதினருக்கு திருமணம், தம்பதி ஒற்றுமை, கூட்டுத்தொழிலில் லாபம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம், வேலை என கனவுகளை நனவாக்குவார். அக்.20 முதல் அதிர்ஷ்ட வாய்ப்பு, வேலைவாய்ப்பு, செல்வாக்கை அதிகரிப்பார். 3,4 ம் பாதத்தினருக்கு மார்ச் 17 முதல் ஜென்ம குருவாக அலைச்சலை அதிகரித்தாலும், சொத்து, சுகம், வருமானம், வசதி என்ற நிலைக்கு உயர்த்துவார். மே26 முதல் குடும்பத்தில் நிம்மதி, பணப்புழக்கத்தை அதிகரிப்பார். அக்.20 முதல் திருமண வயதினருக்கு திருமணம், சொந்த வீடு, வாகனம், வருமானம் என்று நன்மைகளை அதிகரிப்பார். நினைத்ததை நடத்தி வைப்பார்.


சூரிய சஞ்சாரம் 

மிருகசீரிடம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, பிப். 13 – ஏப். 13 காலத்திலும், ஜூலை 17 –ஆக. 17, அக். 18 – நவ. 16 காலங்களிலும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, மார்ச்15 – மே 14 காலத்திலும், ஆக. 18 – செப். 17, நவ. 17 – டிச. 15 காலங்களிலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். எடுக்கும் முயற்சியை வெற்றியாக்குவார். உடல்பாதிப்பை நீக்குவார். எதிர்ப்பு, வம்பு, வழக்கு என்ற நிலையை மாற்றுவார். வேலையில் முன்னேற்றம், வியாபாரம் தொழிலில் லாபத்தையும் உண்டாக்குவார்.


பொதுப்பலன் 

இதுவரை இருந்த நெருக்கடி மறையும். முயற்சியில் வெற்றியுண்டாகும். செல்வாக்கு உயரும். விருப்பம் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். வசதி அதிகரிக்கும். புத்திசாலித்தனத்தால் நினைத்ததை சாதிப்பீர்கள். 


தொழில்

தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். போட்டியாளர்கள் பலம் இழப்பர். உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், மருந்தகம், கெமிக்கல், பெட்ரோல், நிதி நிறுவனம், பங்குச்சந்தை கை கொடுக்கும், மருத்துவர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், கலைஞர்கள், எழுத்தாளர்கள் முன்னேற்றமடைவர்.


பணியாளர்கள் 

வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.  தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு இழுபறியாக இருந்த பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். செல்வாக்கு உயரும்.


பெண்கள் 

படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என எதிர்பார்ப்பு நிறைவேறும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகி நிம்மதி உண்டாகும். கணவருடன் இணக்கமான நிலை ஏற்படும். பொன், பொருள் சேரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.


கல்வி 

தேர்வு வரை வேறு சிந்தனைக்கு இடம் தராமல் படிப்பில் அக்கறை கொள்வது அவசியம். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பதால் மதிப்பெண் உயரும். விரும்பிய கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.


உடல்நிலை 

தொடர் சிகிச்சையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். உடல்நலனில் ஏற்பட்ட தொந்தரவு விலகும். மனதில் இருந்த பயம் போகும். மருத்துவச் செலவு குறையும்.


குடும்பம் 

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொன், பொருள், சொத்து சேரும். கடன் தொல்லை முடிவிற்கு வரும். பணப்புழக்கம் ஏற்படும். செல்வாக்கு உயரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.


பரிகாரம் : திருத்தணி முருகனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


திருவாதிரை: உழைப்பால் உயர்வீர்கள்


வித்யா காரகனான புதன், யோகக்காரகனான ராகு அம்சத்தில் பிறந்து நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு  2026 முயற்சியால் முன்னேற்றம் காணும் ஆண்டாக இருக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடந்தேறும். வியாபாரம், தொழிலில் ஆதாயம் இருக்கும். பணியாளர் நிலை உயரும்.  வேலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். சொத்து, சுகம் உண்டாகும். வழக்கு, விவகாரம் சாதகமாகும். 


சனி சஞ்சாரம்

மார்ச் 6 வரை பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். தொழிலில் லாபம், புதிய சொத்து, சமூகத்தில் அந்தஸ்து, செல்வாக்கு என்ற நிலையை ஏற்படுத்துவார். அதன் பின் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் சிலர் வேலையில் மெமோ, தண்டனை நிலைக்கு ஆளாவர். தொழிலில் தடை, எதிர்பார்ப்பில் இழுபறியை ஏற்படுத்துவதுடன், உடல் பாதிப்பு, நண்பர்களுடன் கருத்து வேறுபாட்டை உண்டாக்குவார். வீண் செலவை ஏற்படுத்தி நெருக்கடிக்கு ஆளாக்குவார். பணியாளர்கள், வியாபாரிகள் கவனமாக செயல்படுவதும், சட்டத்தை மதிப்பதும் அவசியம். 


ராகு, கேது சஞ்சாரம் 

நவ.13 வரை பாக்கிய ஸ்தானமான 9ல் ராகுவும், சகாய ஸ்தானமான 3ல் கேதுவும் சஞ்சரிப்பதால் உங்களின் நிலை உயரும். எடுத்த பணியில் வெற்றியுண்டாகும். செல்வாக்கு உயரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். தெய்வ பலம் உண்டாகும். இக்காலத்தில் நினைத்ததை உங்களால் சாதிக்க முடியும். அதன் பின், 2ல் கேதுவும், 8ல் ராகுவும் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் குழப்பமும், பண  நெருக்கடியும் ஏற்படும். உடல் பாதிப்பும், தவறான நபர்களின் நெருக்கத்தால் பொருளாதார இழப்பும் ஏற்பட வாய்ப்புண்டு. நவ.13க்குப் பிறகு அனைத்திலும் எச்சரிக்கை அவசியம்.


குரு சஞ்சாரம்

மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார். தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக். 20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக செல்வதால், மார்ச் 17 முதல் ஜென்ம குருவாக அலைச்சலை அதிகரிப்பார். குடும்பத்திற்கும் உங்களுக்கும் இடைவெளி ஏற்படும். வேலை.. வேலை என ஓடும் நிலையை உருவாக்குவார். பொருளாதார நிலை உயரும். வீடு, வாகனம், பொன், பொருள், சொத்து சேரும். மே.26 முதல் தன, குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பவர், குடும்பத்தில் நிம்மதி, பணப்புழக்கத்தை அதிகரிப்பார்.  தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வேலை தேடுவோரின் கனவை நனவாக்குவார். அக். 20 முதல் தன்னம்பிக்கை கூடும். திருமணம், வீடு, வாகனம், வருமானம் என நன்மை உண்டாகும்.  நினைத்ததை நடத்தி வைப்பார்.


சூரிய சஞ்சாரம்

மார்ச் 15 – மே 14 காலத்திலும், ஆக.18 – செப்.17, நவ.17 – டிச.15 காலங்களிலும் சூரியன் உங்கள் முயற்சியை வெற்றியாக்குவார். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். உடல்பாதிப்பை நீக்குவார். எதிர்ப்பு, வம்பு, வழக்கு என்ற நிலையை மாற்றுவார். வேலையில் முன்னேற்றம், வியாபாரம் தொழிலில் லாபம் கிடைக்கும்.  அரசு வழியில் ஆதாயம் வரும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார்.


பொதுப்பலன் 

பாக்கிய ராகு, சகாய கேது, குடும்ப குரு, 120 நாட்கள் சூரியனால் உங்களுக்கு நன்மை அதிகரிக்கும்.  ஜீவன சனியால் நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கும் நிலை உண்டாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் பல வழியிலும் வரும். நினைத்த வேலைகள் நடந்தேறும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். விருப்பம் நிறைவேறும்.


தொழில் 

தொழில் முன்னேற்றம் பெறும். சிலர் வெளியூரிலும் தங்களின் கிளையை தொடங்குவர். புதிய தொழில் தொடங்க அரசு அனுமதி கிடைக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெத்தாகும். வெளிநாட்டு வர்த்தகம், நிதி நிறுவனம், இண்டஸ்ட்ரீஸ், ஐ.டி., பங்கு வர்த்தகம், வாகன விற்பனை, தொழிற்சாலை,  டிராவல்ஸ், பதிப்பகம், கல்வி நிறுவனம், கமிஷன் ஏஜன்சி, சினிமா, சின்னத்திரை, வலைதளம் தொழில்களில் வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். 


பணியாளர்கள் 

பணியாளர்கள் அலட்சியம், தவறுகளுக்கு இடம் தராமல் செயல்படுவது அவசியம். கர்மக்காரகன் சனி, தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தவறு செய்பவர்களுக்கு சங்கடம் உண்டாகும். அதே நேரத்தில் நியாயமாக கிடைக்க வேண்டிய சலுகை கிடைக்கும். தற்காலிக பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.


பெண்கள் 

திருமண யோகம் உண்டாகும். உயர் கல்வி கனவு நனவாகும். தகுதியான வேலை கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.  வேலையில் ஏற்பட்ட நெருக்கடி தீரும். உறவுகளுடன் இணக்கம் உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். பொன், பொருள் சேரும்.


கல்வி 

தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும் என்றாலும், தேர்வு வரையில் வேறு சிந்தனைக்கு இடம் தராமல் படிப்பில் அக்கறை கொள்வதும் ஆசிரியரின் ஆலோசனையை ஏற்பதும் அவசியம்.


உடல்நிலை

உடல்நிலையில் சங்கடம் தோன்றினாலும் அவை மருத்துவத்திற்கு கட்டுப்படும். நீண்ட நாளாக சிகிச்சை பெறுவோருக்கும் உடல்நிலை சீராகும். 


குடும்பம் 

நீண்டநாள் கனவு நனவாகும். வீடு, வாகனம், ஆடை, ஆபரணம் என வசதிகள் அதிகரிக்கும். சேமிப்பு, செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும்.


பரிகாரம்: திருவாலங்காடு மகாகாளியை வழிபட நன்மை உண்டாகும்.


புனர்பூசம்: முயற்சியால் முன்னேற்றம்


ஞானக் காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3 ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும், 4ம் பாதமான கடகத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.


பிறக்கும் 2026 ம் ஆண்டில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழில் முன்னேற்றமடையும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணியாளர்களின் நிலை உயரும். 4 ம் பாதத்தினருக்கு மனதில் இருந்த பயம் போகும். குடும்பம், வியாபாரம், வேலை, வருமானத்தில் நெருக்கடி தீரும். உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.


சனி சஞ்சாரம்

1,2,3 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 வரை நினைத்தது நடக்கும். சொத்து, சுகம், பட்டம், பதவி என்ற கனவு நனவாகும். அதன்பின் கவனமாகவும் நேர்மையாகவும் செயல்படுவீர்கள். செலவு அதிகரிக்கும்.  தாயாரின் நிலையில் பாதகம் ஏற்படும். 4 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 வரை அஷ்டமச்சனியாக சஞ்சரித்து சங்கடம் தந்தாலும், அதன்பின் பாக்ய சனியாக முன்னேற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும். செல்வ செழிப்புடன் வாழும் நிலை உருவாகும். 


ராகு, கேது சஞ்சாரம் 

1,2,3 ம் பாதத்தில் பிறந்தவருக்கு நவ.13 வரை பாக்கிய ராகு, சகாய கேதுவால் நினைத்தது நிறைவேறும். அதன்பிறகு அனைத்திலும் கவனம் தேவை. 4 ம் பாதத்தினருக்கு சில சோதனை உருவாகும். உழைப்பு, முயற்சியால் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் குழப்பம், பண விவகாரத்தில் நெருக்கடி வரலாம். 


குரு சஞ்சாரம்

மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக  செல்வதால், 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 17 முதல் அலைச்சல், சிலருக்கு இட மாற்றம், செலவு அதிகரிக்கும். அதற்கேற்ப வருமானம் உயரும். வீடு, வாகனம், திருமணம், குழந்தை பாக்கியம் என கனவு நனவாகும். மே 26 முதல் குடும்பத்தில் நிம்மதி, பணப்புழக்கம் கூடும். வேலை, தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தகுதியான வேலை கிடைக்கும். அக்.20 முதல் தைரியமாக செயல்பட வைத்து தன்னம்பிக்கையை அதிகரிப்பார். திருமணம், சொந்த வீடு, வருமானம், பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். 4 ம் பாதத்தினருக்கு மார்ச் 17 முதல் செலவு, நிம்மதியற்ற நிலை ஏற்பட்டாலும் தேவைக்கேற்ப வருமானம் வரும். மே 26 முதல் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். திருமணம், குழந்தை, வீடு என கனவுகள் நனவாகும்.  அக். 20 முதல் குடும்பத்தில் நிம்மதி, தம்பதி ஒற்றுமை, வழக்கில் வெற்றி,  திடீர் அதிர்ஷ்டம், வேலை, தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.


சூரிய சஞ்சாரம்

புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 15 – மே 14 காலத்திலும், ஆக.18 – செப்.17, நவ. 17 – டிச.15 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு, ஜன.1 – 14, ஏப்.14 – ஜூன் 14 காலத்திலும், செப்.18 – அக்.17, டிச.16 – 31 காலங்களிலும் சூரியன் அதிர்ஷ்ட வாய்ப்புகளை தருவார். வேலை, தொழிலில் முன்னேற்றம் தருவார்.  முயற்சிகளை வெற்றியாக்குவார். நோய், வழக்கில் இருந்து பாதுகாப்பார். எதிர்பார்ப்பு நிறைவேறும்.  அரசுவழியில் ஆதாயம் வரும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். 


பொதுப்பலன் 

உங்கள் முயற்சிக்கேற்ப ஆதாயம் உண்டாகும்.  நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி இருக்கும். வியாபாரம், தொழிலில் தடைகள் விலகும். தேவைக்கேற்ற பணம் வரும். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். செல்வாக்கு உண்டாகும்.


தொழில் 

தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி, மொபைல், ஏற்றுமதி இறக்குமதி, பங்கு வர்த்தகம், தொழிற்சாலை,  டிராவல்ஸ், குடிநீர், விவசாயம், ஜூவல்லரி, கமிஷன் ஏஜன்சி தொழில்கள் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள் 

உழைப்பிற்கேற்ற மதிப்பும், ஊதியமும் உயரும். நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் வேறு இடத்திற்கு செல்லும் நிலை ஏற்படும். தற்காலிக பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.


பெண்கள் 

படிப்பு, திருமணம், வேலை, குழந்தை பாக்கியம் என்ற எதிர்பார்ப்பு, விருப்பம் நிறைவேறும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னை மறையும்.  உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகளை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்ல முடியும். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. 


கல்வி 

படிப்பில் கூடுதல் அக்கறை தேவை. பொழுது போக்குக்கு  இடமளிக்காமல், விளையாட்டை தவிர்த்து ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பதும், படிப்பில் கவனம் செலுத்துவதும் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்க வழிவகுக்கும். 


உடல்நிலை 

உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மருந்து, மாத்திரை செலவுகள் கட்டுப்படும். பரம்பரை நோய், தொற்று நோய் என அவதிப்பட்ட நிலை மாறும்.


குடும்பம் 

சொந்த இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். சேமிப்பு உயரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். உறவுகளின் மத்தியில் செல்வாக்கு உயரும்


பரிகாரம் : ஆலங்குடி குருவை வழிபட வாழ்வில் நன்மை அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !