மேலாய்குடி சுப்ரமணிய சுவாமி கோயிலில் வராஹி அம்மனுக்கு அபிஷேகம்
ADDED :17 hours ago
பரமக்குடி: பரமக்குடி அருகே மேலாய்குடி கிராமம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் வராஹி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
தேய்பிறை பஞ்சமியையொட்டி மஞ்சள், பால், தயிர் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. செவ்வரளி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டது. தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். * கமுதி –மதுரை ரோடு எட்டுக்கண் பாலம் அருகே ஆதி வராஹி அம்மன் கோயிலில் மார்கழி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. வராஹி அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம், மாதுளை, திரவிய பொடி உட்பட 16 வகை அபிஷேகம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தீப ஆராத்தி நடந்தது. பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். வராஹி அம்மனுக்கு அபிஷேகம் செய்த மஞ்சள், சந்தனம் பிரசாதமாக வழங்கப்பட்டது.