உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதபுரீஸ்வர் கோவிலில் சத்குரு தியாகராஜ சுவாமி ஆராதனை இசை விழா

வேதபுரீஸ்வர் கோவிலில் சத்குரு தியாகராஜ சுவாமி ஆராதனை இசை விழா

புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் கோவிலில் நடந்தது.


விழாவையொட்டி, காந்தி வீதி, வேதபுரீஸ்வரர் கோவிலில் நேற்று சத்குரு தியாகராஜ சுவாமியின் உருவப்படத்திற்கு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை, நாதஸ்வர கலைஞர்கள் ராமலிங்கம், பிச்சமு த்து, தவில் கலைஞர்கள் சவுந்தரராஜன், ஜிவரத்தினம் ஆகியோரின் மங்கள இசை நிகழ்ச்சியை நடத்தினர். தொடர்ந்து, சிறப்பு நாதஸ்வர கலைஞர் பாலாஜி, சிலம்பரசன் சிறப்பு தவில் கலைஞர்கள் கணபதி, எம்.எஸ்., சுப்புலட்சுமி விருது பெற்ற பெங்களூருவை சேர்ந்த ரஞ்சித் விநாயக் ஆகியோரின் நாதஸ்வர, தவில் இன்னிசை கச்சேரி நடந்தது. திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !