உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை

சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை

உடுமலை: உடுமலை நெல்லுக்கடை வீதி, ஸ்ரீ சவுந்திரரராஜ பெருமாள் கோவிலில், ஏக தின லட்சார்ச்சனை நடந்தது.

உடுமலை நெல்லுக்கடை வீதியில், ஸ்ரீ பூமி நீளா நாயகி, சவுந்தரவல்லித்தாயார் சமேத ஸ்ரீ சவுந்திரராஜ பெருமாள் கோவில் உள்ளது.

கோவிலில், ரத சப்தமியை முன்னிட்டு, ஸ்ரீ சவுந்திரராஜ பெருமாளுக்கு, ஏக தின லட்சார்ச்சனை நடந்தது. காலை, 6:30 மணிக்கு, நித்ய திருவாராதனம் நடைபெற்றது.

காலை, 7:30 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கியது. மூலமந்த்ர ஹோமம், திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. இரவு மகா தீபாராதனை, சர்வ தரிசனம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !