உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடும்பு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா

கொடும்பு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா

பாலக்காடு; கொடும்பு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சிற்றூர் அருகே உள்ளது கொடும்பு சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு எல்லா ஆண்டும் தைப்பூச தேர் திருவிழா கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டு திருவிழா இன்று காலை நடை திறந்ததும் துவங்கியது. அதிகாலை 3:30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் பல்லக்கில் எழுந்தருளி வலம் வருதல் நடைபெற்றது. தொடர்ந்து நிறமாலை தரிசனம், 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 6:00க்கு உற்சவ மூர்த்திகளின் ரதாரோகண நிகழ்வு நடைபெற்றது. காலை 9:00 மணிக்கு மேல தாளங்கள் முழங்க யானை மீது திருமஞ்சன கலசம் கொண்டு வரும் வைபவம் நடந்தது. 11:00க்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4:00 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க உற்சவமூர்த்திகளின் திருதேரோட்டம் நடந்தது. முருகனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பி பக்தர்கள் தேரை இழுத்தனர். திருத்தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !