வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தைப்பூச விழா
ADDED :3 days ago
வடமதுரை; வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் வளாக சுப்பிரமணிய சுவாமி கோயில், தென்னம்பட்டி பாலமுருகன் கோயில், தீத்தாகிழவனுார் கோவில்தோட்டம் பேசும்பழனியாண்டவர் கோயில் உள்ளிட்ட ஏராளமான முருகன் கோயில்களில் தைப்பூச விழானை முன்னிட்டு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அய்யலுார் தீத்தாகிழவனுாரில் அக்கினிசட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல் என நேர்த்திக்கடன் வழிபாடுகள் நடந்தன. தைப்பூசத்தை முன்னிட்டு இக்கோயிலில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் ஒரே குழுவாக ஏதாவது ஒரு முருகன் கோயிலுக்கு செல்வது வழக்கம். தற்போது 61 வது ஆண்டாக தற்போதைய கோயில் பூசாரி வெங்கடேசன் தேர் ஒன்றை இழுத்தபடியும், மற்ற பக்தர்கள் பாதயாத்திரை பழநிக்கு புறப்பட்டனர்.