உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் வித்யா சரஸ்வதி ஹோமம்

மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் வித்யா சரஸ்வதி ஹோமம்

காஞ்சிபுரம்: மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் 10-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான “ஸ்ரீ வித்யா சரஸ்வதி ஹோமம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது.  இப்பூஜையில் 500-க்கும் மேற்பட்ட   மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.  மேலும், பூஜையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில் ஆகியவை பிரசாதங்களாக வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் பரம்பரை தர்மகர்த்தா, துணை ஆணையர்/செயல் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !