புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி வழிபாடு
ADDED :239 days ago
புதுச்சேரி: புதுச்சேரி, காந்தி நகரில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா விமர்சையாக நேற்று நடந்தது. புதுச்சேரி, காந்தி நகரில் பழமை வாய்ந்த வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு மகா சிவராத் திரியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது. அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் திரளான பொதுமக்கள் வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ராஜேஷ் கண்ணா செய்திருந்தார்.