ராமேஸ்வரத்தில் பாவை விழா
ADDED :4688 days ago
ராமேஸ்வரம்: திருவெம்பாவை, திருப்பாவை குறித்து, மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், இந்து சமய அறநிலை துறை, முதற்கட்டமாக தமிழகத்தில் 680 கோயிலில், பாவை விழா நடத்த உத்தரவிட்டது. அதன்படி, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் பள்ளி, விவேகானந்தா பள்ளியின் 6 முதல் 8 வகுப்பு சேர்ந்த, மாணவ, மாணவிகளுக்கு, ராமேஸ்வரம் கோயிலில் பாவை விழா போட்டி நடந்தது. கட்டுரை, ஒப்புவித்தல் போட்டியில், முதலிடம் பிடித்த மாணவி உத்தரதேவி, இரண்டாம் பிடித்த உமா நந்தினி, விஷ்னுபிரியா, மூன்றாம் இடம் பிடித்த கிருபா சங்கரி, மெர்சி, செய்து ரபீயா பரிசு வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.