உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை மூலை அனுமார் கோவிலில் சிறப்பு பூஜை!

தஞ்சை மூலை அனுமார் கோவிலில் சிறப்பு பூஜை!

தஞ்சாவூர்: மூலை அனுமார் கோவிலுள்ள ஐயப்பன் சன்னதியில் சாஸ்தா ஹோமம், சிறப்பு பூஜை நடந்தது. தஞ்சை மேலவீதியில் மூலை அனுமார் கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுள்ள ஐயப்பன் சன்னதியில் மஹா கணபதி ஹோமம், சாஸ்தா ஹோமமும் நடந்தது. இதையொட்டி நடந்த சிறப்பு பூஜை, வழிபாட்டில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து இரவு, ஏழு மணிக்கு ஸ்வாமி புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !