தைப்பூசவிழா ஆலோசணை கூட்டம் பழநியில் இல்லை!
ADDED :4688 days ago
பழநி : பழநியில் தைப்பூசத் திருவிழா செயல்பாடுகள் குறித்த ஆலோசணைக் கூட்டம் நடத்த முடியாது. திண்டுக்கலில் நடக்க உள்ளது. அதன் பின் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என கலெக்டர் தெரிவித்தார். பழநியில் கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது: பழநிக்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் வருவதால், அவர்களின் பாதுகாப்பு, தேவைகள் குறித்து, அந்தந்த மாவட்ட அதிகாரிகளிடம் கருத்துகேட்க உள்ளோம். கூட்டத்தை பழநியில் நடத்த முடியாது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடத்த உள்ளோம். அதன்பின், கூட்டத்தின் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது குறித்து பழநியில் தனியாக வேண்டுமானால் இணைஆணையர் தலைமையில் ஆலோசணைக் கூட்டம் நடத்திக்கொள்ளலாம். ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து ஆலோசணை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும், என்றார்.