நெல்லிக்குப்பம் விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால சிறப்பு வழிபாடு
ADDED :1 hours ago
நெல்லிக்குப்பம்; விஷ்ணு துர்க்கைக்கு நடந்த ராகு கால சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நெல்லிக்குப்பம், பூலோகநாதர் கோவிலில், விஷ்ணு துர்க்கைக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு, பங்குனி மாதம் செவ்வாய்கிழமை ராகுகால வழிபாடு, நேற்று மாலை நடந்தது. இதையொட்டி, துர்க்கைக்கு பால், தயிர் உட்பட பல பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.