பழநி பெரியநாயகி அம்மன் கோவிலில் யுகாதி பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி
ADDED :201 days ago
பழநி; பழநி, பெரியநாயகி அம்மன் கோவில் தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதி பண்டிகையை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பழநி பெரியநாயகி அம்மன் கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை முன்னிட்டு வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தீபாதாரனுக்கு பின் செல்வ சுப்பிரமணிய குருக்கள் பஞ்சாங்கம் வாசித்தார். அதில் பராபவ ஆண்டு பலன், திதி, வார, ராசி, நட்சத்திரம், யோக, காரண பலன்கள் மற்றும் இந்த ஆண்டு சிறப்பு பலன்கள் ஆகியவற்றை எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி, நெய்க்காரப்பட்டி அரிமா சங்க சுப்புராஜ் உற்பட பலர் கலந்து கொண்டனர்.