உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ராமேஸ்வரம்: விடுமுறை நாளையொட்டி நேற்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


நேற்று ஞாயிறு விடுமுறை நாளையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர்.


அவர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள்.


பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் திட்டக்குடி, கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !