ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா துவக்கம்
ADDED :1 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் 86ம் ஆண்டு பங்குனி உத்திரவிழா நேற்று (மார்ச் 23) காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கி ஏப்.,2 வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் இரவு 8:00 மணிக்கு சண்முகர் அர்ச்சனை வழிபாடு நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்., 1ல் பங்குனி உத்திரம் அன்று காலையில் நொச்சிவயல் ஊருணிக்கரையில் பிரம்ம புரீஸ்வரர் கோயிலில் வழிபட்டு பால்குடங்கள், காவடி ஊர்வலம் நடக்கிறது. மதியம் சுவாமிக்கு பாலாபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனையும், இரவு பூக்குழி இறங்குதல் நடக்கிறது. ஏப்.,2 ல் இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. விழாவில் தினமும் பக்தி இன்னிசை, சிலம்பாட்டம், பக்தி சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.