உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மூன்று மாத கம்பம் கொடியேற்றம் நடந்தது. இங்கு ஆண்டுதோறும் வைகாசியில் 17 நாட்கள் திருவிழா நடக்கும். இதற்கு முன்னதாக பங்குனியில் மூன்று மாத கம்பம் கொடியேற்றப்படும். இந்தாண்டு திருவிழா வரும் மே 18 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதன் முன்னறிவிப்பாக மூன்று மாதக் கொடி கம்பம் ஏற்றப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட கம்பத்துடன் அர்ச்சகர் சண்முகம் ரத வீதிகள் வழியாக வைகையாற்றுக்கு சென்று பூஜை செய்தார். இதையடுத்து கோயில் முன்பு பீடத்தில் கொடியேற்றப்பட்டு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப் பட்டது. நிர்வாக அலுவலர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !