உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை
ADDED :190 days ago
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மூலவர் வராகி அம்மனுக்கு 16 வகை அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள ஏராளமான அம்மிகளில் பச்சை விரலி மஞ்சள் அரைத்து உருண்டை பிடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். எலுமிச்சை, தேங்காய் உள்ளிட்டவைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.