சலவாதி கிராமத்தில் இரு கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3 days ago
திண்டிவனம்: சலாவதியில் நடந்த இரண்டு கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர். திண்டிவனம் அருகே சலவாதி கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவில் மற்றும் ஜடாமுனீஸ்வரன் ஆகிய கோவில்களின் நுாதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம் இன்று காலை 10 மணியளவில், அடுத்தடுத்து நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில் பல்கேற்ற பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.