கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
கடலூர்; திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் அனைத்து சன்னதியில் உள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 18ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நவக்கிரக ஹோமம், நட்சத்திர ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை, தன பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகளை தொடர்ந்து பிரசன்னாபிஷேகம், பரிவார கலாகர்ஷணம், மாலை கும்பாலங்காரம், சுவாமி, அம்பாள் கலாகர்ஷணம், யாத்ரா ேஹாமம், யாத்ராதானம், முதல் கால யாக சாலை பூஜை நடந்தது.
நேற்று 24ம் தேதி காலை 7:30 மணி முதல், 12:00 மணி வரை அங்குரார்ப்பணம், நான்காம் கால யாக சாலை பூஜை, மாலை 5:00 மணி முதல், 9:00 மணி வரை சதுர்த்வார பூஜை, ஐந்தாம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. இன்று 25ம் தேதி காலை 4:00 மணிக்கு 6ம் கால யாக சாலை பூஜையை தொடர்ந்து, பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், 8:00 மணிக்கு நாடி சந்தானம், 9:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 10:30 மணிக்கு விமானம் மற்றும் ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம், அதனைத் தொடர்ந்து, மூலவர் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.