/
கோயில்கள் செய்திகள் / அதிகார நந்தி வாகனத்தில் வலம் வந்து அருள்பாலித்த திருவான்மியூர் மருந்தீஸ்வரர்
அதிகார நந்தி வாகனத்தில் வலம் வந்து அருள்பாலித்த திருவான்மியூர் மருந்தீஸ்வரர்
ADDED :189 days ago
சென்னை; திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழா மூன்றாம் நாளான இன்று அதிகார நந்தி வாகனத்தில் வலம் வந்து சந்திரசேகரர்.பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காலை 6:00 மணிக்கு உற்சவர் சந்திரசேகரர், அதிகார நந்தி வாகனத்தில் சூரிய பகவானுக்கு காட்சியருளல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின், மாட வீதிகளை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 8:30 மணிக்கு, சந்திரசேகரர் பூத வாகனத்தில் சந்திரனுக்கு காட்சியருளல் நிகழ்ச்சியும், இரவு தியாகராஜர் மூன்றாம் திருபவனி, பார்த்தசாரதிக்கு அருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.