உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனைத்து தருணங்களிலும் கை கொடுக்கும் பகவத் கீதை

அனைத்து தருணங்களிலும் கை கொடுக்கும் பகவத் கீதை

அன்னுார்: ‘ராம நாம ஜெபமே முக்திக்கு வழி’ என, சொற்பொழிவில், பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


அன்னுார் கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், கோவை ‘இஸ்கான்’ சார்பில், ராம நவமியை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நடந்தது. பன்னாட்டு நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்து, கோவை இஸ்கான் இயக்கத்தில் ஆன்மிகப் பணியில் ஈடுபட்டு வரும் பக்தர் ஸ்ரீனிவாச ஹரிதாஸ் பிரபு பேசுகையில், ‘‘வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை, அனைத்து தருணங்களிலும் நாம் பின்பற்ற வேண்டியவை குறித்து, பகவத் கீதையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. பகவத் கீதையில், தினமும் சில ஸ்லோகங்களையாவது வாசிக்க வேண்டும். ராம நாம ஜெபமே முக்திக்கு வழி. ‘இஸ்கான்’ இயக்கம் சார்பில் பல லட்சம் வீடுகளுக்கு கிருஷ்ண பக்தி இயக்கம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால் மன நிம்மதி ஏற்பட்டுள்ளது,’’ என்றார். பகவத் கீதை ஸ்லோகம் தெரிவித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. ‘ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு, பெருமாள் கோவில் வளாகத்தில் நடக்கும் பகவத் கீதை சொற்பொழிவு நிகழ்ச்சியில், பக்தர்கள் பங்கேற்று, இறையருள் பெறலாம்’ என, ‘இஸ்கான்’ இயக்கத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !