உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

மானாமதுரை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

மானாமதுரை; மானாமதுரையில் மிகப் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்மனை அம்மனை தரிசனம் செய்தனர்.


மானாமதுரை மாரியம்மன் கோயில் தெருவில் 200 ஆண்டுகள் மிகப்பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது.இங்கு கடந்த சில மாதங்களாக கும்பாபிஷேகத்திற்காக பரம்பரை நிர்வாகி விஜி போஸ் மற்றும் ஸ்தபதி பாண்டி ஆகியோர் தலைமையிலான குழுவினர் திருப்பணிகளை செய்து வந்தனர். பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோயில் முன்பாக ஹோமங்கள் வளர்க்கப்பட்டு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கி தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று இன்று காலை 9:40 மணிக்கு யாகசாலையில் பூர்ணாகுதி முடிவடைந்த உடன் அர்ச்சகர்கள் புனித நீர் அடங்கிய கடங்களை மேள,தாளங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து கோபுரத்திற்கு கொண்டு சென்று வானில் ஏராளமான கருடங்கள் வட்டமிட கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது.பின்னர் மாரியம்மனுக்கு 18 வகையான மூலிகைப் பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்ட பின்னர் தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது. மாலை 6:30 மணிக்கு நிர்வாகி விஜிபோஸ் தலைமையில் ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடங்கள் எடுத்து வந்து கோயிலுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர். கும்பாபிஷேக விழாவில் மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !