உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவீதியுலா

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவீதியுலா

 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு, உற்சவருடன் 63 நாயன்மார்கள் திருவீதிஉலா நேற்று நடந்தது. காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா, கடந்த 22ம் தேதி காலை கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் காலையிலும், இரவும், உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில், வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அதன்படி, ஐந்தாம் நாள் உத்சவமான நேற்று முன்தினம் இரவு கைலாசபீட ராவண வாகனத்தில் ஏகாம்பரநாதர் உலா வந்தார். இதில், ஆறாம் நாள் உத்சவமான நேற்று காலை, 63 நாயன்மார்கள் உத்சவம் விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் துளுவ வேளாள மரபினர்கள் சங்கம் சார்பில் நடந்த உத்சவத்தில், அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் ஏலவார்குழலி அம்பிகையுடன், ஏகாம்பரநாதர், சண்டிகேஸ்வரர் என 63 நாயன்மார்கள் திருக்கூட்டத்துடன் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது காஞ்சி புரம் தெய்வ சேக்கிழார் அறக்கட்டளை சார்பில், தேவார திருவீதியுலா வாகனத்தில், ஓதுவார்கள் பக்தி பாடல்களை பாடியபடி சென்றனர். இதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஏழாம் நாள், பிரபல உத்சவமான தேரோட்டம் இன்று காலை நடக்கிறது. இதில், 10ம் நாள் உத்சவமான பங்குனி உத்திர திருக்கல்யாணம் வரும் 31ம் தேதி இரவு நடக்கிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !