உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராமநவமி விழா விமரிசை

மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராமநவமி விழா விமரிசை

மதுராந்தகம்; மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த கோதண்ட ராமர் கோவிலில், ஸ்ரீராமநவமி விழாவில், வைரமுடி சேவை விமரிசையாக நடந்தது. மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமர் கோவில், ஹிந்து சமய அறநிலை யத்துறையின் கீழ் செயல் பட்டு வருகிறது. உல இத்தலத்தில், கில் வேறெங்கும் காண முடியாத மூலவர் சன்னி தியில் ராமர் சீதையை கைப்பற்றியவாறு திருமணக் கோலத்தில் அமைந்தி ருப்பது சிறப்பு பெற்ற ஸ்தலமாகும். ராமானுஜருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்த விளைந்த திருப்பதி என இத்தலத்திற்கு த்வியம் மற்றொரு பெயரும் உண்டு. இந்த ஆண்டு, ஸ்ரீ ராமநவமி விழா கோதண்ட ராமருக்கு சிறப்பு அபி ஷேகத்துடன் கடந்த 18ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று, காலை 10:30 மணிக்கு விசேஷ அலங் கார திருமஞ்சனம், உயன் யாசம் மற்றும் மூலவர் முத்தங்கி சேவை நடந்தது. மாலை 3:15 மணிக்கு, ஏரி காத்த கோதண்ட ராமர், ஜெனகவல்லி தாயார் வைர முடி சேவை யுடன் அவதார கட்டத்தில் காட்சியளித்தார். இரவு, புஷ்பக விமா னத்தில் வெள்ளி தேரில் பெரிய பெருமாள் திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக் கும் பிரசாதம் வழங்கப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !