ஆஞ்சநேயர் கோயிலில் சீதா ராமர் உலா திருக்கல்யாண கோலாகலம்
ADDED :3 days ago
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் ஆஞ்சநேய பெருமான் கோயில் ராமநவமி விழா மார்ச் 19ல் துவங்கியது.
தினமும் ராமர் பல்வேறு அவதாரங்களில் அலங்காரமாகி சீதை, லட்சுமணன், அனுமனுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மார்ச் 26ல் புத்திர காமேஷ்டி யாகம் நடந்தது. மறுநாள் ராம நவமி விழாவும், மார்ச் 28 மாலை சீதா ராமர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சுவாமிகள் பூப்பல்லக்கில் வீதி உலா வந்தனர். தினமும் பஜனைகள், பெண்களின் கோலாட்ட நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.