உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வட்டமலை ஆண்டவர் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

வட்டமலை ஆண்டவர் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

அன்னூர்: குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று நடந்தது. குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர் கோவில், 17ம் ஆண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கடந்த 27ம் தேதி துவங்கியது. காலையில் கிராம தேவதை வழிபாடும், இரவு 8:00 மணிக்கு கிராம சாந்தியும் நடந்தது. கடந்த 28ம் தேதி காலை கணபதி பூஜையும், கொடியேற்றமும், நடந்தது. 30ம் தேதி வரை தினமும் காலையில் வேள்வி பூஜையும், மாலையில் சுவாமி உட்பிரகார உலாவும் நடந்தது. கடந்த 31ம் தேதி மாலையில் திருக்கல்யாண உற்சவமும், சுவாமி யானை வாகனத்தில் உலா வருதலும் நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு வட்டமலை ஆண்டவர் தேருக்கு எழுந்தருளினார். காலை 10 : 30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. அன்னூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேருக்கு முன்னே காவடியாட்டம், கயிலை வாத்தியம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது ஏராளமானோர் பொதுமக்களுக்கு நீர்மோர், கம்பங்கூழ், குளிர்பானம் வழங்கினர். திடும் இசைக்கு ஏற்ப பக்தர்கள் நடனம் ஆடிய படி சென்றனர். மதியம் 1:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. நாளை (ஏப். 2) இரவு 7:00 மணிக்கு பரிவேட்டையும், தெப்போற்சவமும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !