கல்யாணம் போன்ற சுபவிஷயங்களில் வாழை மரத்தைக் கட்டுவது ஏன்?
ADDED :4689 days ago
திருவள்ளூர் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் இடத்தை மங்களம் பொருந்தியதாக அலங்கரிக்க வேண்டும். மாவிலை, தென்னங்குருத்து தோரணம், வாழை மரம், மாக்கோலத்தை மங்களத்தின் அடையாளங்களாக சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக எல்லோரும் விரும்புவது நம் குலம் தழைக்க வேண்டும் என்பதையே. பூவும் தாருமாக இருக்கும் வாழையின் அடியில் கன்றுகள் தோன்றி தழைக்கும். அதுபோல நம் வம்சமும் விருத்தியாக வேண்டும் என்று செய்கிறோம்.